search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகை ரம்யா"

    • கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்யா.
    • கன்னடத்தில் சார்லி-777 என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

    பெங்களூரு:

    கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்யா. தற்போது சினிமாவில் நடிக்காமல் ரம்யா ஒதுக்கி இருக்கிறார். இந்த நிலையில், கன்னடத்தில் சார்லி-777 என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை நடிகை ரம்யா பார்த்திருந்தார். பின்னர் கடந்த 6-ந் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சார்லி-777 திரைப்படம் சிறப்பாக இருப்பதாக அவர், கருத்து பதிவிட்டு இருந்தார்.

    ரம்யாவின் கருத்தை பலர் வரவேற்று பதிவு செய்திருந்தார்கள். ஆனால் 'ப்ரீத்தம்.பிரின்ஸ்.கே' என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ள ஒரு நபர், ரம்யா பற்றி ஆபாசமாக கருத்து பதிவு செய்திருந்தார். இதை பார்த்து நடிகை ரம்யா அதிர்ச்சி அடைந்தார். அதே நேரத்தில் தன்னை பற்றி ஆபாசமாக பேசிய மா்மநபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அவர் முடிவு செய்தார்.

    இதுபற்றி பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியுடன் தொலைபேசியில் நடிகை ரம்யா பேசியதாக தெரிகிறது. பின்னர் மர்மநபர் பற்றி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி ரம்யாவுக்கு, போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெங்களூரு அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் உள்ள மத்திய மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று சென்ற நடிகை ரம்யா, மா்மநபர் மீது புகார் அளித்தார்.

    அதில், தன்னை பற்றி இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பதிவிட்ட மர்மநபர் யார் என்று கண்டுபிடித்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கூறி இருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் பற்றிய தகவல்களை சேகரித்து வருவதுடன், அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படத்தின் டிரைலரை குறிப்பிட்டு பிரதமர் மோடி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என நடிகை ரம்யா மீண்டும் டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். #DivyaSpandana #PMModi
    புதுடெல்லி :

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவருமான, ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா, கடந்த சில தினங்களுக்கு முன் டுவிட்டர் பதிவில் ஒரு போட்டோஷாப் புகைப்படத்தை பதிவிட்டார்  

    அதில், ’பிரதமர் மோடி தன் மெழுகு சிலை மீது தானே திருடன்’ என எழுதிக் கொள்வது போல் உள்ளது. இந்த சர்ச்சை புகைப்படத்தை பார்த்த உத்தரப்பிரதேச வழக்கறிஞர் சையது ரிஷ்வான் அகமது என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோமதிநகர் போலீசார் ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்தநிலையில்,  நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான் ஆகியோர் நடிக்கும், ' தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' என்ற படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்தியாவை ஆட்சி புரிந்த  இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக கடற்கொள்ளையர்கள் போர் நடந்தது குறித்து விளக்கும் படம் இதுவாகும்.

    இந்த படத்தில் நடிகர் அமீர்கான் அனைவரையும் ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஒரு காட்சியில் அவர் நம்பிக்கை துரோகம் என்பது எனது சுபாவம் என்று கூறுவார். இதனை வைத்து ரம்யா மீண்டும் டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

    அமீர்கான் புகைப்படத்தை பதிவிட்டு,  ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்கு மோடி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என டுவிட்டரில் விளாசி உள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. #DivyaSpandana #PMModi
    ×